அரசுப் பள்ளி ஆசிரியைக்கு இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, February 5, 2023

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீட்டு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்

பள்ளி ஆசிரியைக்கு உரிய அரசுப் இழப்பீடு வழங்காத மருத்துவக் காப்பீடு நிறுவன நிர்வாக இயக்கு நருக்கு பிடிவாரண்ட் பிறப் பித்து அரியலூர் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.


அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரி யையாக பணியாற்றி வருபவர் பாரதி(43). இவரது கணவர் சுவாமி நாதனுக்கு, அரசு மருத்துவக் காப் பீடுத் திட்டத்தின் கீழ், சென்னைதனி யார் மருத்துவமனையில் கடந்த 2020-ல் அறுவை சிகிச்சை செய் யப்பட்டது. ஆனால், மருத்துவ சிகிச்சைக்கான செலவு முழுவ தையும் தர மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் மறுத்து விட்டதால், அந்நிறுவனத்தின் மீது 

 அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாரதிவழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த குறைதீர் ஆணையம், புகார்தாரருக்கு மருத் துவ சிகிச்சைக்காக ஏற்பட்ட செல வில் அளிக்க வேண்டிய ரூ.1,98,308 மற்றும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரமும் தமிழக அரசின் மருத்துவக்காப்பீடு திட் டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறு வனம் வழங்கவேண்டும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.



ஆனால், காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்காததால்,தர.

நடடிக்கை எடுக்கக் கோரி ஆசி ரியை பாரதி, கடந்த ஆண்டு நவம் பர் மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் மனுத் தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனத் தின் சார்பில் யாரும் ஆஜராகாத தால், அந்த மருத்துவக் காப் பீட்டு நிர்வாக இயக்குநருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்டது.



No comments:

Post a Comment