மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த பிரச்னை அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, February 4, 2023

மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த பிரச்னை அரசு பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கழிப்பறை சுத்தம் செய்த சம்பவத்தில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பின் பள்ளி தலைமையாசிரியர் ஜனகராஜ் பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார். இப்பள்ளியில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரை 186 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 12 பேர் பணிபுரிகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையதளங்களில் சில நாட்களுக்கு முன் வைரலானது. சம்பவம் குறித்து தேனி சி.இ.ஓ., செந்திவேல்முருகன் விசாரணைக்கு பின் பெரியகுளம் ஆர்.டி.ஓ., சிந்து பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார். இதன் அறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி கலெக்டர் முரளீதரன் பரிந்துரையில் சி.இ.ஓ., பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ்யை திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment