அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 2, 2023

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

IMG_20230202_185422

மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்த ரூ.1011.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 5519 உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ.827.85 / - இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


கல்வி மாவட்டங்களில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

SPDSelf Defence Training - Download here

No comments:

Post a Comment