சோம்புக்கீரை பொரியல் செய்முறை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 14, 2023

சோம்புக்கீரை பொரியல் செய்முறை



உடலுக்கு அதிகளவு சத்துக்கள் தரும் சோம்பு கீரை பொரியல் செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்: 


சோம்பு கீரை - 2 கப், 


சின்ன வெங்காயம் - 50 கிராம், 


காய்ந்த மிளகாய் - 4, 


உப்பு - தேவையான அளவு. 


துருவிய தேங்காய் - தேவையான அளவு


தாளிப்பதற்கு: 


நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், 


கடுகு - 1/2 டீஸ்பூன், 


உளுந்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன், 


சீரகம் - 1/2 டீஸ்பூன், 


கறிவேப்பிலை - சிறிது.


செய்முறை: 



சோம்புக்  கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்  கொள்ளவும். சின்ன வெங்காயத்தைப்  பொடியாக நறுக்கிக்  கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக்  காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.


வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில்ல நறுக்கி வைத்துள்ள சோம்பு கீரையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன் அதனுடன் சிறிது துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். சத்தான சோம்பு கீரை பொரியல் தயார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

No comments:

Post a Comment