தமிழகத்தில் 138 நகராட்சிகளில் உள்ள 11 ஆயி ரம் பணியிடங்கள் அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு, அர சாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங் களை வெளி முகமை மூலம் நிரப் புவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப் பது ஊழியர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 சிறப்பு நிலை நகராட்சிகள், 25 தேர்வு நிலை நகராட்சிகள், 31 முதல் நிலை ராட்சிகள், 70 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன.
இந்த நகராட்சிகளில் புதிய வரையறைப்படி நிர்ணயம் செய் யப்படும் பணியிடங்கள், தற்போ துள்ள பணியிடங்களில் தக்க வைக்கப்படும் பணியிடங்கள்,ஒப் படைப்பு செய்யப்படும் பணியிடங்கள் ஆகியவற்றின் விவரங்களுடன் கூடிய அரசாணை கடந்த''மாதம் 23-ஆம் தேதி வெளியிடப் பட்டது.
11,212 பணியிடங்கள்:
அதன் படி, தற்போது நிரந்தரப் பணியி லுள்ள பொது, பொது சுகாதா ரம், பொறியியல் ஆகிய பிரிவுக ளின் கீழ் பணிபுரியும் ஓட்டுநர் கள், பொறியாளர்கள், குடிநீர், தெரு விளக்குப் பராமரிப்பாளர் கள், இரவுக் காவலாளிகள், சங்கி லியர்கள் உள்ளிட்ட 4,212 பணி யிடங்கள், பொது சுகாதாரப் பிரி வின் கீழ் பணிபுரியும் 7 ஆயிரம் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் அவர்களின் ஓய்வுகுப் பிறகு அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
இதன்மூலம், ஓராண்டுக்கான ஊதியச் செலவினம் ரூ.606 கோ டியிலிருந்து ரூ.460 கோடியாகக் குறையும். புதிய வரையறைகளின் படி, தற்போதுள்ள பணியிடங் களை முறைப்படுத்தும் போது ஒப்படைப்பு செய்யப்படும் 11212 ஊழியர்களுக்கான ஊதியச் செல வினத்துக்கு அரசின் நிதி உதவி தேவைப்படாது என்றும் தெரி நகவிக்கப்பட்டுள்ளது.
கடை நிலைப் பணியாளர்கள் அதிருப்தி:
தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில் உள்ள நிரந் தரப் பணியாளர்களால் கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பீடு செய்து, சிக்கன நடவடிக்கையாக 35ஆயிரம் பணியிடங்களை 3,417 பணியிடங்களாகக் குறைத்து கடந்த மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவு 1 நிலை உருவாக்கப்பட்டு உள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளில் (பேரூராட்சி யாக இருந்து நகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டவை) ஒற்றை இலக் கத்திலேயே நிர்வாகப் பணியாளர் கள் உள்ளனர்.
இதேபோன்று, நிர்ணயிக்கப் பட்ட 6024 பணியிடங்களில் வேண்டும். 1200-க்கும் மேற்பட்ட பணியி டங்கள் காலியாக உள்ளதாக அர சாணையிலேயே குறிப்பிடப்பட் டுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
11ஆயிரம் பணியிடங்களை வெளி முகமையிடம் ஒப்படைக்க அரசு எடுத்துள்ள முடிவு நக ராட்சி ஊழியர்கள் மத்தியில் அதி ருப்தியை ஏற்டுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவ லர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கா.முருகானந்தம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகள் சேவைத் துறை என்ற நிலையை மாற்றி வருமானம் ஈட்டும் துறை போன்று ஊழியர் களின் ஊதியச் செலவினத்தை அரசுக்கு ஏற்படும் இழப்பாகக் கணக்கீடு செய்துள்ளனர். மக்கள் தொகை அடிப்படையிலோ, நகராட்சியின் பரப்பளவு அடிப்படையிலோ பணியிடங்கள் வரையறை செய்யப்படவில்லை.
குறிப்பாக டி- பிரிவு ஊழியர் கள் புதிய அரசாணையின் மூலம் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான நக ராட்சி, மாநகராட்சிகளில் ஒரு தூய்மைப் பணியாளர்கூட இனி நிரந்தரப் பணியாளராக இருக்க முடியாது. சுமார் 11,200 பணியிடங்கள் உங்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதற்கான முடிவை அரசு மறு பரிசீலனை செய்ய
டி- பிரிவு பணியிடங்களை அரசே நியமனம் செய்து, அந்த ஊழியர்களின் வாழ்வாதாரத் தைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment