MISSION DELTA : 4 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, January 5, 2023

MISSION DELTA : 4 முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் கற்றல் திறனை மேம்படுத்த CEO புதிய திட்டம்

 

IMG_20230105_113232

தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் திட்டம் :

நமது மாவட்டத்தில் 4 - ஆம் வகுப்பு முதல் 9 - ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களை இனங்கண்டறிய, சரளமாக வாசிக்க, எழுத தேவையான அடிப்படை மொழி அறிவு, அடிப்படை கணித செயல்பாடுகள் (Basic Arithmetic Operations) ஆகியவற்றில் திறனடைவு பெறாத மாணவர்களை 31.03.2023 -க்குள், உரிய திறனடைவு பெறச் செய்து தகுதிப்படுத்திட “MISSION DELTA” என்ற செயல் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. 


💫அனைத்து பள்ளிகளிலும் மேற்காணும் குறைந்தபட்ச அடைவினை இன்னும் பெறாத மாணவர்களின் பெயர் பட்டியலை வகுப்பு வாரியாக தாயார் செய்து 10.01.2023 க்குள் இணைப்பில் காணும் Google Spread Sheet – இணைப்பில் பதிவேற்றம் செய்யுமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது.


💫மேலும் மாணவர்களின் பெயரை இனங்கண்டறிவது, தொடர்ந்து கண்காணிக்கும் பணிகளை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


💫இப்பொருள் சார்ந்து மறு நினைவூட்டலுக்கு இடமின்றி செயல்பட அனைவருக்கும் அறிவுறுத்தப்படுகின்றது.


முகஅ

தஞ்சாவூர்.

MISSION  DELTA  Revised  Letter  - Download here

No comments:

Post a Comment