ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் EPS ஓய்வூதியத்திற்கான அடிப்படை சம்பளத்தை அதிகபட்சமாக ரூ.15,000 என நிர்ணயித்துள்ளது. தற்போது இதனை உயர்த்த கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கு 3 மடங்காக ஓய்வூதியம் உயரும் என கூறப்படுகிறது.
ஓய்வூதியம்:
தற்போது EPFO அமைப்பின் கீழ் ஊழியர்களின் EPS ஓய்வூதியத்திற்கான அடிப்படை சம்பளம் ரூ.15,000 என உள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில், 10 ஆண்டுகளுக்கு EPFOக்கு பங்களிக்க வேண்டும். அத்துடன் ஊழியர்கள் 20 ஆண்டுகால சேவையை முடித்தால் மட்டுமே அவர்களுக்கு 2 ஆண்டுகள் வெயிட்டேஜ் கிடைக்கும்.
உதாரணமாக ஊழியர் ஒருவர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணியில் சேவை பணியாற்றிய பிறகு EPS ஓய்வூதியம் பெற ரூ.15,000 அடிப்படையாக கொண்டே ஓய்வூதியம் கணக்கீடு செய்யப்படும். இவர் ரூ.20,000 பெற்றாலும், ரூ.30,000 சம்பளமாக பெற்றாலும் இதே முறைதான் பின்பற்றப்படும். அதன்படி இவருக்கு ஜூன் 2, 2030 முதல் ரூ.3000 மட்டுமே ஓய்வூதியமாக அளிக்கப்படும். அதனால் இந்த அடிப்படை சம்பளத்தின் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அதன்படி உச்ச நீதிமன்றம் ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தால், ஊழியர் இறுதியில் பெற்ற அடிப்படை சம்பளத்தை அடிப்படையாக கொண்டு ஓய்வூதியம் கணக்கீடு செய்யப்படும். அதன்படி தற்போது ஊழியர் ஒருவர் கடைசியாக ரூ.50,000 அடிப்படை சம்பளமாக பெற்றால், அவருக்கு ரூ.25000 வரை ஓய்வூதியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போது இருக்கும் முறையிலிருந்து 3 மடங்கு அதிகமாக ஓய்வூதிய கிடைக்க வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment