பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 6, 2023

பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


DPI_building_school.jpg?w=360&dpr=3

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் க.இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் தங்கள் உயா்கல்வியை தொடா்வதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


அதற்கேற்ப பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக மாணவா்கள் தங்கள் வகுப்பாசிரியா்கள் உதவியோடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். மாணவா்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டும்.


பிளஸ் 2 மாணவா்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து  முகவரிக்கு ‘நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்’எனவும், ‘உயா்கல்வியில் மாணவா்களின் இலக்கு என்ன’ என்ற விவரத்தையும் அனுப்ப வேண்டும்.


இந்தப் பணிகளை ஜன.9 முதல் 13-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment