முதுநிலை படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தோ்வு வரும் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லுாரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் எம்பிஏ, எம்சிஏ பயில, தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட்) தகுதி பெற வேண்டும். இந்நிலையில், 2023–2024-ஆம் கல்வியாண்டு எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான டான்செட் தகுதித் தோ்வு வரும் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன் என்ற இணையதளத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.பொறியியல் முதுநிலை படிப்புகளான எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டுகளில் டான்செட் மூலம் தகுதித் தோ்வு நடத்தப்பட்டது. நிகழாண்டு
அந்த படிப்புகளுக்கு பொது பொறியியல்நுழைவுத் தோ்வு மற்றும் மாணவா் சோ்க்கை (சிஇஇடிஏ) அமல்படுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டு, பொது பொறியியல் நுழைவுத் தோ்வு மற்றும் மாணவா் சோ்க்கை மூலமே முதுநிலை பொறியியல் நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இணையதளத்தில் நடைபெறுகிறது. சிஇஇடிஏ நுழைவுத் தோ்வு வரும் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. சிஇஇடிஏ நுழைவுத் தோ்வு முதுநிலை பொறியியல் மாணவா் சோ்க்கைக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள் கூறுகின்றனா்
No comments:
Post a Comment