ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 1, 2023

ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு


ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இனி அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு மற்றும் முதலீடுகளுக்கு நல்ல வட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடுகளுக்கான வட்டியை உயர்த்தியது என்பதும் ஒரு சில வங்கிகளில் 7.5 சதவீதம் முதல் 8.0 வரை பிக்சட் டெபாசிட்டிற்கு வட்டி வழங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அஞ்சல் நிலையங்களிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அஞ்சல் நிலையங்களில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கு 1.1 சதவீதம் வரை மத்திய அரசு வட்டியை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இருப்பினும் பிபிஎஃப் என்று கூறப்படும் பொது வருங்கால வைப்பு மற்றும் பெண் குழந்தை சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதி ஆகிய திட்டங்கள் மீது மட்டும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ஜனவரி 1 முதல் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு கூடுதல் வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு இனிமையான செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 1.1 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் மாத வருமானத்தை பெருக்கும் திட்டங்களுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால் அள்ளிக்கொடுக்கும் அஞ்சலகத்தில் இனி தாராளமாக முதலீடு செய்யலாம்.

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்:

1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.5 சதவீதம்

2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.8 சதவீதம்

3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 6.9 சதவீதம்

5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட்கள்: 7.0 சதவீதம்

தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (NSC): 7.0 சதவீதம்

கிசான் விகாஸ் பத்ரா: 7.2 சதவீதம்

பொது வருங்கால வைப்பு நிதி: 7.1 சதவீதம்

சுகன்யா சம்ரித்தி கணக்கு: 7.6 சதவீதம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: 8.0 சதவீதம்

மாதாந்திர வருமானக் கணக்கு: 7.1 சதவீதம்.


No comments:

Post a Comment