(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வாரந்தோறும் ‘சிக்கன்’ மற்றும் பழங்களை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு, மதிய உணவாக சாதம், காய்கறிகள், பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நினைத்த மாநில அரசு, இந்த மாதம் முதல் மதிய உணவில் வாரந்தோறும் சிக்கன் மற்றும் பழங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக 371 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
