குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது.
குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினார்கள். அதற்கான காலி பணியிடங்கள் 7,301 இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கூடுதலாக 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உருவாகி இருப்பதாகவும்,தற்போதைய நிலையில் 9,870 காலிப்பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த 2500 பணியிடங்கள் மட்டும் இல்லாமல் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்குள் மேலும் சில காலிப்பணியிடங்கள் உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே 15 லட்சம் பேர் டிசம்பர் மாதம் எழுதிய தேர்வு முடிவு ஜனவரி மாதத்தின் 15 தேதிக்கு பிறகுதான் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். TNPSC அதிகாரி தெரிவித்துள்ள இந்த தகவல் தேர்வர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment