ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நடைபெற்று கொண்டிருக்கும் தொகுத்தறி மதிப்பீட்டில்...
முதல் வகுப்பு
1. முதல் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு நிலைக்குண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.
2 ஆம் வகுப்பு
1. இரண்டாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர்கள் அரும்பு நிலைக்குண்டான அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு நிலை கொண்ட கேள்விகள் அவர்களுக்கு தோன்றும்.
2. அதே இரண்டாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மொட்டு நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.
3 ஆம் வகுப்பு
1. மூன்றாம் வகுப்பில் அரும்பு நிலையில் உள்ள மாணவர் அவர் நிலைக்குண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்ச த்தில் அதற்கு அடுத்த நிலையான மொட்டு, மலர் நிலைக்கான கேள்விகள் அவருக்கு ஒன்றன்பின் ஒன்றாக தோன்றும்.
2. அதே மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் உள்ள மாணவர்கள் அவர்கள் நிலைக்கு உண்டான தொகுத்தறி மதிப்பீட்டில் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த நிலையான மலர் நிலைக்குண்டான கேள்விகள் அவருக்கு தோன்றும்.
3. அதே மூன்றாம் வகுப்பில் மலர்நிலை குழந்தைகளுக்கு அவர்கள் நிலைக்கு உண்டான கேள்விகள் மட்டுமே இடம்பெறும்
No comments:
Post a Comment