கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி, அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அந்த நாட்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் ஏதும் நடத்தக்கூடாது. இதுசார்ந்து அரசு, நிதியுதவி மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனைத்து மண்டல இயக்குநர்களும் உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேன்டூஸ் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிச. 9-ல்நடக்கவிருந்த தேர்வுகள் டிச.24-ம் தேதியும், டிச.10-ல் நடக்கவிருந்த தேர்வுகள்டிச.31-ம் தேதியும் நடக்கிறது.
No comments:
Post a Comment