சென்னை, டிச.4: பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு காலதாமதம் இன்றி ஊதி யம் வழங்க வேண்டும் என தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர் கள் நல கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது.
இது குறித்து இக்கூட்டமைப் பின் கூட்டமைப்பு தலைவர் அரு ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக்கல்வித்துறையில் பணி யாற்றும் அலுவலக பணியாளர் கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் அவர்க ளுக்கு பூஜியம் கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு பணி மூப்பு அடிப் படையில் பணியிட மாறுதல் பெற்று வெவ்வேறு மாவட்டங்க ளில் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு பணியிட அலுவலகங்களில் மாறுதல் பெற்று இரண்டு மாதங்கள் தான் ஆகி றது. ஆனால் அவர்களுக்கு ஊதி யம் வழங்கப்படவில்லை.
கல்வித் துறை ஊழியர்கள் மாதந்தோறும் தவணை பணம் செலுத்த முடியாமல் மிகவும் சிர மப்பட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக ஊதியம் வழங்க உத்தரவிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment