சென்னை, டிச.4: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளைப் போட்டித் தேர்வின்றி, நேரடியாக நியமனம் செய்ய வேண் டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 2013-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, வேலை வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான் றிதழை ஆயுள் காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என இரண்டு தேர்தல் வாக்குறுதிகளை திமுக கொடுத்தது.
இதில், இரண்டாவது வாக்குறுதியான ஆசிரியர் தகுதிச் சான்றி தழை ஆயுள்காலத் தகுதிச் சான்றிதழாக மத்திய அரசே மாற்றி அறிவித்துவிட்டது. அதற்கான அறிவுரைகளும் மாநில அரசுக களுக்கு வழங்கப்பட்டு விட்டன.
ஆனால், முதல் வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற் றவில்லை. இதனை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். மாநில அரசின் அதி கார வரம்புக்கு உள்பட்ட இந்த வாக்குறுதியைக் கூட திமுக அர சால் நிறைவேற்ற முடியவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரி யது. கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் முதல்வர் உடன டியாகத் தலையிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment