திருப்பூா் ஒன்றியத்தில் ஆவின் முகவராக தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
.இது குறித்து ஆவின் பொது மேலாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் ஒன்றியத்தில் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 2.05 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு 34 ஆயிரம் லிட்டா் பால் பாக்கெட்டாக உள்ளூரில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், மீதமுள்ள பால் கோவை, ஈரோடு மற்றும் சென்னை இணையத்துக்கு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூா் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருள்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் உப பொருள்கள் விற்பனை முகவா்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதில், பால் உபபொருள்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடா், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீா், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, விருப்பமுள்ள மற்றும் ஆா்வமுள்ள நபா்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளா்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு விற்பனை பிரிவு மேலாளா்கள் சரண்யா 9080294484, சுரேஷ் 9865254885 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment