இளையவர் மூத்தவர் ஊதிய வித்தியாச வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, December 5, 2022

இளையவர் மூத்தவர் ஊதிய வித்தியாச வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 அரசு ஊழியர்களில் பணி யில் இளையவர் அதிக சம்பளம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கட மையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


நாகை மாவட்டம், ஆயக்கா ரன்புலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய் துள்ள மனுவில் கூறியிருப்பதா வது:-


அதிக ஊதியம்


நான் 1988-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி இடைநிலை ஆசிரிய ராக பணியில் சேர்ந்தேன். இதற்கு மறுநாள், அதாவது அதே ஆண்டு ஜூலை 21-ந் தேதி செல்லப்பாண்டியன் என்பவர் இடைநிலை ஆசிரிய ராகபணியில் சேர்ந்தார். 2002- ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2008-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக வும் பதவி உயர்வு பெற்றேன். ஆனால், செல்லப்பாண்டி


யன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக 2008-ம் ஆண்டுதான் பதவி ஏற்றார். என்னைவிட பணியில் அவர் இளையவர். ஆனால், 2008-ம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சிறப்பு நிலை ஊதியம் உயர்வு வழங்கும்போது, என்னைவிட அவருக்கு ரூ.3 ஆயிரம் அதிகம் ஊதியம் வழங்கப்பட்டது.


பதவி உயர்வு


இதுகுறித்து நான் அளித்த மனுவை நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிராகரித்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்த ரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந் தார்.


இந்த வழக்கு நீதி பதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வக் கீல் வி.காசிநாதபாரதி, மனு தாரரை விட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற செல்லப்பாண்டி யன் ஊதியம் அதிகம் வாங்கி யது மட்டுமல்ல, தற்போது அவர் வட்டார கல்வி அதிகா ரியாகவும் பதவி உயர்வு பெற்று விட்டார்” என்று வாதிட்டார். கல்வி துறை சார்பில் அரசு வக்கீல் சி.சதீஷ் வாதிட்டார்.


அரசின் கடமை


இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், "நாகை தொடக்க கல்வி அலு வலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு பணி விதிகளின்படி, ஒரே பதவியில் உள்ள 2 அரசு ஊழியர்களில், இளையவரைவிட பணியில் மூத்தவர் குறைவாக ஊதியம் வாங்கக்கூடாது. ஒருவேளை இளையவர் அதிக ஊதியம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.


எனவே, 2008-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு, மனுதாரருக்கு 4 வாரங்க ளுக்குள் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment