2022 ஆம் ஆண்டு முடிந்து 2023 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்த 2023-ஆம் ஆண்டு அனைத்து ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கும் என்பதை இன்றைய பதிவில் அறியலாம். பொதுவாக அனைவருக்குமே ராசி பலன் படிக்க மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு நாளுமே இன்றைய நாள் எப்படி இருக்கும், நன்றாக இருக்குமா அல்லது சுமாராக இருக்குமா என்று தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் 2023 இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது.
இந்த 2023-ஆம் ஆண்டாவது எப்படி இருக்கும் என்ற ஆசை இருக்கும். அப்படி 2023-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு ராசி பலன்களை தெரிந்துகொள்ள விரும்பும் நபர் நீங்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். சரி வாங்க இந்த 2023 ஆண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வருடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் புதிதாக வேலை தேடிக்கொண்டிருந்தால் உங்களுக்கு நல்ல நிறுவனத்தில் அருமையான சம்பளத்தில் வேலை கிடைக்கும். இந்த 2023-ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு புதிய மாற்றம் நிகழும். இருப்பினும் திருமணம் வயதில் இருக்கும் மேஷம் ராசிக்காரர்களுக்கு திருமணம் விஷயத்தில் சில அலைச்சல்கள் அல்லது தடங்கல்கள் ஏற்பட்டு உங்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் உறவுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்றாலும் தேவையில்லாத விஷயங்களை பேசுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியம் பொறுத்தவரை இந்த வருடம் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். மேலும் நிதிநிலை பொறுத்தவரை இந்த ஆண்டு உங்களுக்கு வளர்ச்சிகரமாக இருக்கும். குறிப்பாக இந்த ஆண்டு மேஷம் ராசியில் பிறந்த சிலர் சொத்துக்களை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த 2023 ஆம் ஆண்டு ஒரு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடிய ராசிக்காரர்கள் என்று சொல்லலாம். உங்கள் ஜாதகத்தில் தசா புத்திகள் சிறப்பாக அமைந்திருப்பதால் இந்த ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பானதாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகம் பொறுத்தவரை இந்த ஆண்டு நீங்கள் எந்த விஷயத்தையும் தைரியமாக செய்யலாம் உங்களுக்கு முழுமையான வெற்றிகள் கிடைக்க கூடும். ரிஷபம் ராசிக்காரர்கள் உங்கள் திருமணத்தை முடிந்தளவு மே மாதத்திற்குள் செய்துகொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால் திருமணத்தில் உங்களுக்கு எந்த ஒரு தடைகளும் இன்றி சிறப்பாக நடந்து முடியும். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு அவர்களது திருமண வாழ்க்கையும் 2023 ஆம் ஆண்டு நிம்மதியானதாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களும் 2023 ஆம் ஆண்டு கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும் நிதிநிலை பொறுத்தவரை பணம் வரவு உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் பொருளாதாரம் இந்த ஆண்டு நன்கு வளர்ச்சிகரமாக இருக்கும். ஆக இந்த ஆண்டு உங்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். மேலும் தொழில் மற்றும் உத்தியோகம் நிம்மதியானதாக இருக்கும். திருமணம் வாழ்க்கை பொறுத்தவரை கணவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல இடத்தில் நல்ல வரன் அமையும். குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பிறக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு அனைத்து விஷயத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு திருமணத்தில் சில தடைகள் ஏற்படும். திருமணம் வாழ்க்கையை பொறுத்தவரை கணவன் மனைவி உறவுக்குள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், எதிர்பாராத சில விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும் ஆக நீங்கள் உண்டு உங்கள் படிப்பு உண்டு என்று இருப்பது மிகவும் சிறந்தது. பொருளாதாரம் நிதிநிலை பொறுத்தவரை கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு பணம் வரவு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான அளவு இருக்கும். மேலும் ஆரோக்கியத்தில் இந்த ஆண்டு கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
இந்த ஆண்டு சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஓரளவு நல்ல ஆண்டாக தான் இருக்கும். குறிப்பாக 2023-ஆம் ஆண்டு வேலை, தொழில், பணம், முன்னேற்றம், பயணங்கள் இவை எல்லாம் வளர்ச்சிகரமாக இருக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் ஆனவர்களுக்கு 50% நன்றாக இருக்கும் 50% பிரச்சனையாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். பொருளாதார நிலை பொறுத்தவரை வீண் செலவுகள் எதுவும் இருக்காது, இருப்பினும் அதிக சுப செலவுகள் உண்டாகும்
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாக கொண்டவர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு சில பிரச்சனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும். ஆக அந்த பிரச்சனைகளை எளிதாக சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் இல்லறவாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். உங்களது கஷ்டங்கள் இந்த ஆண்டு பலமிழந்து போகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பொருளாதாரத்தில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. மாணவர்கள் படிப்பில் அதிக Hard work செய்து நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.
துலாம்
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலாம் ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சி இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வீட்டு நிதிநிலை வளர்ச்சிகரமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுக்குள் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாது. உத்தியோகத்தில் உங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆண்டு குடும்ப நலம், தொழில் வளம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்கள் செவ்வாயை ராசிநாதனாக கொண்டவர்கள். இவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல பலன்கள் கிடைக்க கூடும். செல்வவளம் நன்றாக இருக்கும். திருமணம் வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் சுபகாரியம் ஒன்று நடக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கணவன் மனைவி உறவுக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மேலும் உங்கள் ஆரோக்கியம் இந்த வருடம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் வளர்ச்சி அடைவீர்கள் மேலும் அதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்க கூடும்.
தனுசு
குருவை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு உங்களுக்கு பொருளாதரம் வளர்ச்சிகரமாக இருக்கும். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புத்ய தொழிலை இந்த ஆண்டு நீங்கள் தொடங்கினால் அதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமைகளை கண்டு வியந்துபோவார்கள். கணவன் மனைவி உறவுக்குள் ஓற்றுமை அதிகம் இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு பணி தொடர்பாக அதிக பயணங்கள் இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வளர்ச்சிகரமான நாளாக இருக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு வளர்ச்சிகரமாக இருக்கும். உங்களை விட்டு விலகி சென்றவர்கள் இப்பொழுது நெருங்கி வருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டின் தேவைகளை இந்த ஆண்டு பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவி உறவுக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதிநிலை பொறுத்தவரை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணம் வரவு கிடைக்கும்.
கும்பம்
சனியை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது ஆக சிந்தித்து செயல்படுவது நல்லது. வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் சில கருத்துவேறுபாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். மாணவர்களை பொறுத்தவரை ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் புதனை ராசிநாதனாகக் கொண்டவர்கள் ஆவார். உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அதனை வென்று வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டின் ஆரம்பம் தங்களுக்கு மிகவும் சோதனையாக இருக்கலாம். உங்களுக்கு பல பிரச்சனைகள், தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் மீது பலர் பொறாமைப்படுவார்கள் மேலும் உங்கள் மீது கண் திருஷ்டியும் இருக்கும். கணவன் மனைவி உறவுக்குள் நல்ல புரிதல் இருக்கும். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். மாணவர்கள் இந்த ஆண்டு கல்வியில் கொஞ்சம் மந்தமாக தான் இருப்பார்கள்.
No comments:
Post a Comment