தொடர் பெருமழையின் காரணமாக சென்னை , திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று ( சனிக்கிழமை ) சென்னை , திருவள்ளூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment