கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 பல் மருத்துவ அலுவலர்கள், 2-பல் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5 பல் மருத்துவ அலுவலர்கள், 5-பல் மருத்துவ உதவியாளர்கள் ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்தஅடிப்படையில் மாதம் ஒன்றுக்கு பல் மருத்துவ அலுவலர் பதவிக்கு ரூ.34,000/- மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு ரூ.13,800/- என்ற தொகுப்பூதியத்தில் மாவட்டநலச்சங்கம் மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளது. விரிவான விபரங்களைகோவைமாவட்ட லிருந்துபதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்தவிண்ணப்பப் படிவம் இணையதளமுகவரிhttps://coimbatore.nic.in மற்றும்
பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (BDS) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றும் Tamil Nadu Dental Council Registration செய்தும் இருக்க வேண்டும். பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்சம் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிதொடர்பாக குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும். முற்றிலும் தற்காலிகமான பல் மருத்துவ அலுவலர் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.34,000/- வழங்கப்படும். பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.13,800/- வழங்கப்படும். இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயதுவரம்பு 35 -ற்குள் (35 Years) இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான நபர் பூர்த்திசெய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 05.12.2022 அன்றுமாலை 5.00 மணிக்குள் பந்தையசாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரபணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோஅளிக்கலாம். மேற்படி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 16.12-2022 தேதி காலை 10.00 மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும்.
NOTIFICATION -CLICK HERE
APPLICATION -CLICK HERE
No comments:
Post a Comment