மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :
2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ( பொ ) ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment