அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 8, 2022

அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

 அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த குழுவில் சட்டநிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பிற வல்லுநர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை பின்பற்றப்படுவதற்கான சட்டவல்லுனர் குழு அமைத்து தமிழக அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி தலைமையில் என்.ஆர்.இளங்கோ, அருண் மொழி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் சட்டவல்லுனர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களாக உச்சநீதிமன்ற தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருண் மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் சட்ட நிபுணர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அலுவலர்கள் குழுவில் சட்டவிவகாரங்களை பொறுத்தவரையில் அதன் செயலாளர்களாக இருக்க கூடிய கார்த்திகேயன், மற்றும் சட்ட இயற்றுதல் செயலாளர்கோபி ரவிக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் பிற வல்லுநர்களை பொறுத்தவரையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சிவபிரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் குழுவில் இருக்க கூடிய விஎன்வி நிறைமதி ஆகிய இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி கொள்கைகளை செயல்படுத்திட உரிய சட்டத்தினை இயற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நிவாக சட்ட நிபுணர்களையும் மூத்த வழக்கறிஞர்களும் இதற்கான குழுவில் அமைத்து தலைமைச்செயலாளர் இறையன்பு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளர்

No comments:

Post a Comment