பல்கலைக்கழக ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் நியமனம் நேர்காணல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 21, 2022

பல்கலைக்கழக ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் நியமனம் நேர்காணல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு உதவி பெற்று, தேசிய தகுதி தர வரையரை பெற்ற தொழிற்திறன் பாட வகுப்புகள் நடத்த ஒப்பந்த உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளார்கள். பல்கலைக்கழக நிதி நல்கை குழு விதிகளின்படி உதவி பேராசிரியர் பணிக்கு கல்வி தகுதியான எம்.எஸ்சி. உணவு பதப்படுத்துதல்/ உணவு அறிவியல்/ உயிர் வேதியியல்/ உயிர் தொழில்நுட்பவியல்/ நுண்ணுயிரியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்புடன் யு.ஜி.சி. விதிகளின்படி பிஎச்.டி./யு.ஜி.சி.-நெட்/ டி.என்-செட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் சுயவிவர குறிப்புடன் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு இப்பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment