ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்து மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது. நவ.24 மற்றும் நவ.30-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருந்தால்தான் அரசு வழங்கும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைப்படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணை இணைந்திருக்க வேண்டும்.
இன்னும் ஆதார் பெறாதவர்கள், புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் மற்றொரு ஆணையில், ஒரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவை இருந்தால், இரண்டுக்கு மேலுள்ள மின்சார சேவைகள் வணிக பயன்பாடாக மாற்றப்படும் என்று கூறப்பட்டிருந்தது.ஆதார் மற்றும் மின் நுகர்வோர் எண்ணை இணைக்கும்போது, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சார சேவைகளை பெறுவதைத் தடுக்கலாம்.
முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தின் விலை ரூ.450 ஆகும். உதாரணமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டின் உரிமையாளராக இருந்தால் அவர் இந்த இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்தின் மூலம் அதிக பலனடையலாம். ஒருவேளை அவர் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், வாடகைதாரரின் பெயரை வாடகைதாரர் என்று மின்சார கழகத்தில் பதிவு செய்து முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறலாம். அவர் வீட்டைக் காலி செய்தாலும் அடுத்த வாடகைதாரரின் பெயரைப் பதிவு செய்து முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர்கள் மட்டுமே அனுபவிக்காமல், வாடகைதாரர்களும் அனுபவிக்கலாம்.
பல பேர், ஒரே வீட்டுக்கு மாடிகளைக் கணக்கில்காட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்களது மற்ற மின்சார சேவைகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகப் பெறுகின்றனர். 1000 யூனிட்டுக்குமேல் மின்சாரம் பயன்படுத்தும்போது, அவர்களிடம் யூனிட் ஒன்றுக்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படும். உதாரணமாக, மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் உரிமையாளர் ஒருவர், ஒவ்வொரு மாடிக்கும் தனித்தனி மின்சார சேவைகளை வைத்திருப்பதாக வைத்துக்கொள்ளலாம்.
இதனால், ஒரே இடத்தில் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வணிக பயன்பாடாக மாற்றும்போது இலவச 100 யூனிட் மின்சாரத்தைத் தடுக்கலாம். ஆதார் எண்ணை மின்சார நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும்போது இச்சலுகைகளை பெறும் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார சேவைகளை வைத்திருப்போர் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அப்பார்ட்மென்ட் போன்ற இடங்களில் தனி மீட்டர்கள் இருப்பதால் அங்கே வசிப்பவர்களுக்கு இந்த நடைமுறை பாதிப்பு ஏற்படுத்தாது.
அப்பார்ட்மென்டுகளில் இருக்கும் லிப்ட், பூங்கா ஆகிவற்றின் மின்சார பயன்பாடு 1டி பயன்பாட்டில் சேர்க்கப்படுவதில் மாற்றம் இல்லை. மேலும், இந்த நடைமுறை வணிக பயன்பாடு, விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி இணைப்புகளை பாதிக்காது. இந்த அனைத்து நடவடிக்கைகளுமே வருவாய் கசிவுகளைத் தடுக்க ஏற்படுத்தப்பட்டதாகும். மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடப்பதால், தனிப்பட்ட விபரங்கள் கசியாது என்று கூறினார்.
இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment