வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 27, 2022

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 வனத் தொழில் பழகுநர் பதவிக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:


 தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி 6) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு வருகிற 4ம் தேதி முற்பகல் தாள்-1 ஓஎம்ஆர் முறையிலும், தாள்-2, தாள்-3 கணினி வழித் தேர்வாகவும் வருகிற 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகல், 11ம் தேதி முற்பகல் என 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment