நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 20, 2022

நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்

 நாட்டில் முதன் முறையாக கர்நாடகாவில் டிசம்பர் 23ம் தேதி, அங்கன்வாடி மையங்கள், தொடக்க பள்ளிகளில், புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


மத்திய பா.ஜ., அரசு புதிய தேசிய கல்வி கொள்கையை 2020ல் கொண்டு வந்தது. இதுவரை எந்த மாநிலத்திலும் அறிமுகப்படுத்தவில்லை.


கடந்தாண்டே கர்நாடகாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மாநில பா.ஜ., அரசு அறிவித்தது. இதற்காக ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள், உயர் அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது.


இதற்கிடையில், பெங்களூரில் ஆரம்பகல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் நாகேஷ் நேற்று கூறியதாவது:


நாட்டில் முதல் முறையாக கர்நாடகாவில் தான் புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இதற்குரிய புதிய பாடப்புத்தகங்கள் வர உள்ளது. 1, 2 ம் வகுப்புகளுக்கு தலா இரண்டு புத்தகங்கள் மட்டுமே இருக்கும்.


மாநிலத்தின் 20 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள்; 6,000 தொடக்க பள்ளிகளில் டிசம்பர் 25ம் தேதி தேசிய கல்வி கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது.


கல்வி கொள்கை குறித்து, 'சலிபிலி,' 'நலிகலி' என்றகல்வி திட்டங்கள் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment