2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, November 22, 2022

2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


IMG_20221122_200846

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 19 மற்றும் 25 ன் படி அமைந்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படியும் , அதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் கண்டவாறு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படியும் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதனடிப்படையில் , தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் , உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக , பார்வை 3 இல் காணும் அரசாணையின்படி , சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக்கல்வி ) தகுதிவாய்ந்த அலுவலராக உள்ளார்.


எனவே இதனடிப்படையில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் ( தொடக்கக்கல்வி ) நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான கூட்டம் 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , மேற்படி கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் , மேற்படி கூட்டத்தில் சரிபார்ப்பு பணிக்கான பணியினை மேற்கொள்ள 15 குழுக்கள் அமைத்திடவும் , இக்குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர் -1 , கண்காணிப்பாளர் -1 , உதவியாளர் -2 ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் , மேற்படி பணியினை மேற்கொள்ள பணியாளர்கள் தேவைப்படின் , அருகாமை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர் / அலுவலகப் பணியாளர்களை உட்படுத்தி கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


 மேலும் , இக்குழுவானது 05 குழுக்கள் துவக்கப்பள்ளிக்கானதாகவும் , 10 குழுக்கள் நடுநிலைப்பள்ளிக்கானதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Staff fixation 2022-2023 circular.pdf - Download here...

No comments:

Post a Comment