2020-2021 முதல் -2023 முடிய உள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2849 முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 / கணினி பயிற்றுநர் நிலை -1 காலிப்பணியிடங்களை நிரப்பிட பணிநாடுநர்கள் தெரிவு செய்து அளித்திட கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு வேதியியல் பாடத்திற்கு பணி நாடுநர்கள் தெரிவுப்பட்டியல் ( Selection List ) பெறப்பட்டுள்ளது.
இப்பணிநாடுநர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு 13.10.2022 வியாழன்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது.
12.10.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய ( trb.tn.nic.in ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேதியியல் பாடத்திற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட ( Provisional selection list ) பட்டியலில் இடம் பெற்றுள்ள பணிநாடுநர்கள் , தங்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் ( CV Call letter ) , Provisional selection letter மற்றும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் சென்னை -5 , கலைவாணர் அரங்கத்திற்கு 13.10.2022 அன்று காலை 9.00 மணிக்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment