டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
*கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது
* நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது
*தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியில், 16 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஜூனில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் 31ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது
* தமிழக சிறை பணிகளில் அடங்கிய உளவியலாளர் பணியில், நான்கு காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment