TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 29, 2022

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


IMG_20221028_210643

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு- II / IIA ( தொகுதி- II / IIA ) இற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.

2. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன . மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

3. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது . அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4. இது தொடர்பாக செய்தி / சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை www.tnpsc.gov.in ) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment