காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு, கடந்த மாதம் நடந்தது. அக்., 1 முதல் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை, அனைத்து தனியார், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.
CLICK HERE TO JOB NEWS
அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நாளை வகுப்புகள் துவங்க உள்ளன.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதேபோல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிந்து, நாளை வகுப்புகள் துவங்க உள்ளன
No comments:
Post a Comment