இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வித்துறையில் என்னென்ன பாதிப்பு? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 24, 2022

இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் கல்வித்துறையில் என்னென்ன பாதிப்பு?

 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதியாளர்களுக்கு லாபம் கிடைத்தாலும் ஏற்றுமதியாளர்கள் உள்பட பலருக்கு நஷ்டத்தை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் மாணவர்களின் படிப்பு, தொழில் அதிபர்களின் தொழில் மற்றும் சுற்றுலா துறை ஆகியவை எந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளன என்பதை தற்போது பார்ப்போம்
இந்திய ரூபாய் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக உயர்ந்து 83 என்பதை தாண்டி உள்ளது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும்
 இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கடந்த ஏழு மாதங்களில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு பணவீக்கம், அரசியல் பதட்டங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் விற்பனை செய்வது, கச்சா எண்ணெய் விலை உயர்வு உட்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன.
மாணவர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு சாதாரண இந்திய குடிமகனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை தற்போது பார்ப்போம், வெளிநாட்டில் படித்து கொண்டு இருப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் படிக்க திட்டமிடுபவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் மிகப்பெரிய பாதிப்பு அடைவார்கள். அவர்கள் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழிலதிபர்கள் அதேபோல் வெளிநாட்டில் தொழில் செய்ய திட்டமிட்டவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ரூபாயின் மதிப்பு தொழில் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவர்கள் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட தற்போது அதிக பட்ஜெட் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு சென்றால் டாலரில் தான் அதிக செலவு செய்ய வேண்டும் என்பதால் அதற்கு ஈடாக அதிகளவில் இந்திய ரூபாய் தரவேண்டிய நிலை ஏற்படும். எனவே பலர் வெளிநாட்டு பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாகவும் ரத்து செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக மாணவர்களின் கல்வி, தொழிலதிபர்களின் தொழில் சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதால் மத்திய அரசு உடனடியாக இந்திய ரூபாய் மதிப்பு சரிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: good returns


No comments:

Post a Comment