எல்லையோர ஆயுதப் படைகளில் (சசஸ்த்திர சீமை பலம்) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.எனவே, ஆர்வமும் , தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 399
வயது வரம்பு: 18க்கு மேலும்,23க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படைத் தகுதிகள்: விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்
சம்பள நிலை: 21700 முதல் 69100 வரை (நிலை- 3)
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தெரிவு செய்யப்படும் முறை, பொது நிபந்தனைகள், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த முழுவிவரம், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் கொண்ட விரிவான ஆள்சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment