வங்கக்கடலில் உருவாகிறது ‛சிட்ரங் புயல்: இந்திய வானிலை மையம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 18, 2022

வங்கக்கடலில் உருவாகிறது ‛சிட்ரங் புயல்: இந்திய வானிலை மையம்

 gallerye_091850847_3149634.jpg?w=360&dpr=3

மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாகவும், அதற்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‛சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும். வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது. இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இந்திய வானிலை மையம் மேலும் கூறியுள்ளதாவது: தெற்கு அந்தமானில் உள்ள வளிமண்டல சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக மாறும். வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ‛சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment