தமிழ்நாட்டில் இன்று மாலை 5.14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் தமிழ்நாட்டில் பகுதியளவு சூரியகிரகணம் இன்று ஏற்பட உள்ளது. சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும். உலக அளவில் மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழும் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் மாலை 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும். இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment