நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடி : நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 3, 2022

நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடி : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை, நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்களில் குளறுபடி இருப்பதாக கூறி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், நீட் தேர்விற்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றதாகவும், அதன்பின் செப்டம்பர் 7-ந் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தனது தேர்வு விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு மாணவி வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனையடுத்து, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிக்கும் தேதியை 10 நாட்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதே தேதியில் தேசிய தேர்வு முகமைக்கு நேரில் சென்று விடைத்தாளை பார்வையிடவும் மாணவிக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment