தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 15, 2022

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

 மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதைப் போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஏற்கெனவே இருந்த 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதையடுத்து மற்ற மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என்று உறுதியளித்தது. இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகளையும் வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு நிதிச் சுமையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற தயக்கம் காட்டுவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல், தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர், மனிதவள மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் போன்றோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வானது 34 சதவீதத்திலிருந்து, 4 சதவீதம்‌ உயர்த்தி, 38 சதவீதமாக 01.07.2022 முதல்‌ ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல்‌, தமிழக அரசு ஊழியர்களுக்கும்‌ 4 சதவீதம்‌ உயர்த்தி 38 சதவீதமாக 01.07.2022 முதல்‌ ரொக்கமாக வழங்கிட உரிய ஆணை, தீபாவளி பண்டிகையினை கருத்தில்‌ கொண்டு காலதாமதமின்றி உடனடியாக பிறப்பிக்கப்பட ஆவன செய்யுமாறு கோரி கடந்த 07.10.2022 அன்று கடிதம்‌ அனுப்பியிருந்தோம்‌. நிதி நிலையை காரணம்‌ காட்டி, தொடர்ச்சியாக அகவிலைப்படியை ஆறு மாதங்கள்‌ கால தாமதமாக அறிவித்து வரும்‌ தமிழக அரசின்‌ போக்கு ஏற்கத்தக்கதல்ல.”

போராட்டம் அறிவிப்பு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்‌ போல்‌ அகவிலைப்படி உயர்வினை, உரிய கால இடைவெளிகளில்‌ கடந்த காலங்களில்‌ வழங்கப்பட்டதைப்‌ போன்று தமிழக அரசும்‌ வழங்க வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறோம்‌.கடந்த 3 தவணைகளாக‌ அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு, தொடர்ந்து காலதாமதமாக அறிவித்து வரும்‌ போக்கினை கைவிடக்‌ கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ எதிர்வரும்‌ 18.10.2022 செவ்வாய்கிழமை அன்று, தமிழகம்‌ முழுவதும்‌ அனைத்து அரசு அலுவலகங்கள்‌ முன்பு ஆர்ப்பாட்டம்‌ நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment