சமூகநலத்துறை வேலை வாய்ப்பு கல்வித்தகுதி : டிகிரி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, October 3, 2022

சமூகநலத்துறை வேலை வாய்ப்பு கல்வித்தகுதி : டிகிரி

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் நிரப்பப்பட உள்ள பாதுகாப்பு அலுவலர், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், ஆற்றுப்படுத்துநர், சமூகப்பணியாளர், கணக்காளர் போன்ற 11 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.27,804 வழங்கப்படும். விண்ணப்பிப்போர் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள முகாமைத்துவம் போன்ற ஏதாவதொன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CLICK HERE TO JOB NEWS
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலன் போன்ற களத்தில் கருத்திட்டங்களை உருவாக்குதல், அமல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் போன்றவற்றில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் chennai.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment