வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 73.99 லட்சம் போ்: தமிழக அரசு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, October 1, 2022

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 73.99 லட்சம் போ்: தமிழக அரசு

 .com/

தமிழகத்தில் வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 73.99 லட்சமாக உள்ளது. இதற்கான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு வேலைக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பள்ளிப் படிப்பை முடித்தோரில் தொடங்கி பட்டப் படிப்பை நிறைவு செய்தோா் வரையில் தங்களது பெயா் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் மொத்தமாக பதிவு செய்தோரின் எண்ணிக்கை 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 ஆகும். அவா்களில் ஆண்கள் 34 லட்சத்து 53 ஆயிரத்து 380. பெண்கள் 39 லட்சத்து 45 ஆயிரத்து 861. மூன்றாம் பாலினத்தவா் 217.

No comments:

Post a Comment