விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு மண்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு காலிப்பதவிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இளநிலை பொறியியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். சுருக்கெழுத்தாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 25-க்கு கீழ் இருக்க வேண்டும். உதவியாளர் நிலை-III பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2022 அன்று 27-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்களாவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். கல்வி: உதவியாளர் நிலை- III பொது & உணவுத் தானிய கிடங்குகள் பதவிக்கும், சுருக்கெழுத்தாளர் பதவிக்கும் உயர்கல்வியில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தெரிவு செய்யப்படும் முறை: இரண்டு கட்டங்களாக நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
www.fci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, வரும் 5ம் தேதி மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அதன்பின், ஆன்லைன் விண்ணப்பச் சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment