சென்னை, செப்.24: அரசு ஊழி யர்களின் பதவி உயர்வுக்கான துறைதேர்வுகளுக்கான விண் ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 21ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான துறைதேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.
அதன்படி டிசம்பர் 2022ம் ஆண்டுக்கான துறை தேர்வு களை டிஎன்பிஎஸ்சி நேற்று அறித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் 23ம் தேதி (நேற்று) முதல் இணைய வழி மூலமாக(www.tnpsc.gov.in. www.tnpscexams.in) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வகைகளில் பெறப்படும் விண் ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தா லும் அவை நிராகரிக்கப்ப டும்.
வுக்கு விண்ணப்பிக்கும் ஊழி யர்கள் தங்களின் ‘ஆதார்’ விபரங்களை டி.என்பிஎஸ்சி, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாய மாகும். கணினி வழியிலான கொள்குறி வகை தேர்வுகள் டிசம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறும். விரிந்துரைக் கும் வகை தேர்வுகள் டிசம் பர் 17ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை(டிசம்பர் 18ம் தேதி நீங்கலாக) நடைபெறும். தேர்வு காலை 9.30 தொடங்கி பிற்பகல் 12 மணி வரை மற் றும் மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இதற்காக அனைத்து மாவட்டங்கள். டெல்லியிலும் தேர்வுமையங் கள் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் குறித்த தேர்வுக்கு வருகிற 21ம் நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேதி இரவு 11.59 மணி வரை வரவேண்டும் என்று டி.என்பி விண்ணப்பிக்கலாம். தேர் எஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தகவல்
No comments:
Post a Comment