அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 14, 2022

அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,875 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க முடிவு

 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக 1,875 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.


தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில், உதவி பேராசிரியர் பதவியில், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே உள்ள காலியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் கூடுதலாக உதவி பேராசிரியர்கள் தேவைப்படுவதால், 1,875 கவுரவ விரிவுரையாளர்களை கூடுதலாக நியமனம் செய்வதற்கான கருத்துரு தயார் செய்ய, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் விதிகளின் படி, சரியான கல்வி தகுதி உள்ளவர்கள் மட்டும், புதிய நியமனங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதுதவிர, அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே வெளியிடப்படும்.

இதற்கான தேர்வில், கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு நேர்காணலில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

No comments:

Post a Comment