பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.10.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 16, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.10.2022

 

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: வான் சிறப்பு

குறள் : 16
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

பொருள்:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

பழமொழி :
A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன். 

2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

உலகை அறிந்தவன் வெட்கப்பட மாட்டான்! தன்னை அறிந்தவன் ஆணவமாயிருக்க மாட்டான் - சிம்மன்ஸ்

பொது அறிவு :

1. பூகம்பத்தின் அதிர்வு வேகத்தை அளக்கும் கருவி எது ? 

சீஸ்மோ கிராஃப்.

 2. ரேடியட்டர் என்பது என்ன? 

குளிர்விக்கும் கருவி.

English words & meanings :

flu-id - a substance that has no definite shape and is able to flow. Noun. The paint is more fluid than tube colors. பாய்மம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது.
கால்ஷியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, கொத்தரவரங்காய் சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.

NMMS Q 75: விடுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 328, 164, 82, ___________. விடை: 41. விளக்கம்: 328 ÷ 2 = 164; 164 ÷ 2 = 82; 82 ÷ 2 = 41; அக்டோபர் 17 உலக வறுமை ஒழிப்பு நாள் உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள். நீதிக்கதை ஆப்பைப் பிடுங்கிய குரங்கு மகத நாட்டில் சிவா எனும் தச்சன் வாழ்ந்து வந்தான். அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான். மாலை வேளை நெருங்கவும் சிவா தான் பாதியில் அறுத்து கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான். அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு சிவா பாதி அறுத்து விட்டு சென்ற மரத்தின் மீது விளையாடியது. சும்மா இல்லாமல் அம்மரத்தின் மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப் பிடுங்கியது. அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக் கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது. நீதி : தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது! இன்றைய செய்திகள் 17.10.22 * போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் எச்சரிக்கை. * காவிரி டெல்டா மாவட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழு ஆய்வு. * தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. * தமிழக மின் கட்டண உயர்வு 1-D விதியால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் அதிகம் பாதிக்க வாய்ப்பு. * வணிகச் சேவையில் கால் பதிக்கும் இஸ்ரோவின் ‘எல்விஎம் 3’ ராக்கெட் : 36 செயற்கைக்கோள்களுடன் 23-ல் விண்ணில் பாய்கிறது. * அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. பணவீக்கப் பிரச்சினை உலகம் முழுவதும் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். * துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த தீ விபத்தில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். * டி20 உலகக் கோப்பை: அனல் பறந்த போட்டியில் நெதர்லாந்து அணி திரில் வெற்றி. * இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். * ஜூனியர் கால்பந்து லீக் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது. Today's Headlines * Severe action will be taken against fake doctors, warned the Tamil Nadu Medical Council Chairman . * In Cauvery Del

No comments:

Post a Comment