TN TET PAPER 1 EXAM :நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, September 3, 2022

TN TET PAPER 1 EXAM :நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!!

 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!!


ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் நாள் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணைய வழி வாயிலாக விண்ணமங்கள் பெறப்பட்ட நிலையில்., 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3  நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்காக B.Ed இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். இந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

IMG_20220903_144929

No comments:

Post a Comment