SSC தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ் நாடு அரசின் புதிய முயற்சி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 27, 2022

SSC தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ் நாடு அரசின் புதிய முயற்சி

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மீள இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது. கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் ‘TN Career Services Employment’ என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam – CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் திரு.கொ.வீரராகவ ராவ் இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment