மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 19, 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வேலை வாய்ப்பு


தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உதவியாளர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள் தாளம் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் தாளத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,500 – 58,600 

வேதபாராயணம் காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளியில் வேதபாராயணத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 15,700 – 50,000

 உபகோயில் ஒதுவார் காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 12,600 – 39,900

 உதவி பரிசாரகர் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 4 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 10,000 – 31,500


 உதவி யானைப் பாகன் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 11,600 – 36,800


 கருணை இல்லக் காப்பாளர்

  காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 15,900 – 50,400

 கால்நடை பராமரிப்பு 

தொழிலாளர் காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 10,000 – 31,500 

 தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்) 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 20,600 – 65,500

 ஜெனரேட்டர் ஆபரேட்டர் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 16,600 – 52,400 பிளம்பர் காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 18,000 – 56,900

 சமையல்காரர் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 13,200 – 41,800 

 உதவி சமையல்காரர் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 11,600 – 36,800 

துப்புரவு தொழிலாளர் 

 காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 10,000 – 31,500 வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீனாட்சி அம்மன் கோயில் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தினை ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2022 இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment