ப்ளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து மாணவ - மாணவியரை காப்பாற்ற, சிறிது காலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், 'ப்ளூ' வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்தக் காய்ச்சலில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மருத்துவ மனைகள் நிரம்பிவழிகின்றன.டாக்டர்களின் ஆலோசனைப்படி, புதுச்சேரியில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு காய்ச்சல் இருந்தால், பள்ளிகளுக்கு வர வேண்டாம் என, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி மாணவர்களை வரச் சொல்வதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment