உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 22, 2022

உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்

 உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் டயட், உடற்பயிற்சி செய்வர். உணவு பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவர். கலோரிகள் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவர். எண்ணெய் வகைகளை தவிர்ப்பர். இந்தநிலையில், வீட்டிலேயே சில வழிகளைப் பின்பற்றி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். அந்தவகையில் இங்கு உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான ஜூஸ் வகைகள் குறித்துப் பார்க்கலாம். 


 கிரீன் ஜூஸ்

 கிரீன் ஜூஸ் பல்வேறு பச்சை காய்கறிகள், பழங்களில் இருந்து தயார் செய்யப்படும் ஆரோக்கிய பானமாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. ஆனால் காய்கறிகளை முழுவதுமாக சாப்பிடுவது போன்ற நார்ச்சத்து இதில் கிடைக்காது. பழங்கள் 2 அல்லது 3 ஒன்றாக சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம்.

 

 புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரோற்றமான பானமாக இருக்கும். பழங்கள் இல்லாமல் காய்கறிகள் சேர்த்தும் இந்த ஜூஸ் செய்யலாம். ஆப்பிள் சைடர் வினிகர் பானங்கள் ஆப்பிள் சைடர் வினிகர் என்பது சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து தயாரிக்கப்படுவது. வினிகர் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகரில் தண்ணீர் சேர்த்து குடிப்பது உகந்தது. நீங்கள் தேர்வுசெய்த ஆப்பிள் சைடர் வினிகரில் சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 நட்ஸ் மில்க்

 குறைந்த அளவிலான கலோரிகள் உள்ள நட்ஸ்களை தேர்ந்தெடுத்து ஜூஸ் செய்யலாம். நட்ஸில் பொதுவாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருக்கும். பாதம், வால்நட், முந்திரி போன்ற நட்ஸ்களுடன் பால் கலந்து தயார் செய்யலாம். இனிப்பை விரும்புபவர்கள் பேரீச்சையை சேர்த்து கொள்ளலாம். பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கிறது. தேங்காய் தண்ணீர் தேங்காய் தண்ணீர் அருந்துவது அனைவருக்கும் நல்லது. . தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்திருக்கின்றன. இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்றும் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் உடல் எடையை குறைபவர்கள் தங்களது ஊட்டச்சத்து இழப்பை ஈடுசெய்ய தேங்காய் தண்ணீர் அருந்துவது நல்லது. 

No comments:

Post a Comment