தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்: ”உயர்கல்வியில் ஒரு புரட்சி” டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, September 4, 2022

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்: ”உயர்கல்வியில் ஒரு புரட்சி” டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு


தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


மாணவிகளுக்கு அவகாசம்


மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.


நிதி ஒதுக்கீடு


இதனிடையே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


திட்டம் தொடக்கம்


இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.


அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு


இதனைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி வந்தபோது பள்ளிகளை பார்வையிட வேண்டும் என என்னிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வையிட அழைத்து சென்றேன். இந்தியாவில் பலர் வறுமையால் உய்ரகல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். நாட்டில் 27 கோடி மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். அதில் 66 சதவிகிதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள். தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment